கோவையின் வ.உ.சி., பூங்கா மைதானத்தில் துவங்கிய இந்த அலங்கார் பேரணியில் நாற்பது அலங்கார ஊர்த்திகள் இடம் பெற்றன. ஒவ்வொரு ஊர்த்திகளுக்கும், தமிழர் பாராம்பரியக் கலை நிகழ்வுகள் இடம் பெற்றன. தவில், நாதஸ்வர இசையில் தொடங்கி கறை தாரை தப்பட்டை வரை வாத்திய இசைகளும், கரகாட்டம், முதல் மயிலாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், மானாட்டம், ஒப்பாட்டம், வாடிப்பட்டி மேளம், கேரளாவில் புகழ்மிக்க செண்டைமேளம் , நையாண்டிமேளம், ஆகிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கோவையின் பிரதான பெரும் சாலையாகிய, அவினாசிச் சாலையில் இடம்பெற்ற இந்த அலங்காரப் பவனியை, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மேடையிலிருந்து, தமிழக ஆளுனர், தமிழக முதல்வர், குடியரசுத் தலைவர் ஆகியோர் கண்டு களித்தனர். இவர்களுடன் துணை முதல்வர் உட்டபட மேலும் பல அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேடையில் அமர்ந்திருந்தனர். இது தவிர முக்கிய விருந்தினர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும், சிறப்பு மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. சாலையின் இருபுறமும் பெருமளவிலான பொலிசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ பல்லாயிரக் கணக்கான மக்கள், கோவையில் குவிந்தமையால், கோவையின் பல சாலைகளும் போக்குவரத்துசக்கு மூடப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. |
Wednesday, June 23, 2010
செம்மொழி மாநாடு "இனியவை நாற்பது" அலங்காரக் கலைப்பவனி - பல்லாயிரம் மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்(semmozhi manadu "iniyavai narpathu" alangara kalai bhavani
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment