Thursday, June 10, 2010

வேலை வேணுமா வேலை!!!

வேலை தேடுபவர்களுக்காக சில குறிப்புகள்.

இவை ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இவை அனைத்தையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால், நீங்கள் விரும்பும் வேலை கண்டிப்பாக சாத்தியம்.



This Blog
This Blog





வேலை வேணுமா வேலை!!!

வேலை தேடுபவர்களுக்காக சில குறிப்புகள்.

இவை ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இவை அனைத்தையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால், நீங்கள் விரும்பும் வேலை கண்டிப்பாக சாத்தியம்.



1) முதலில் என்ன மாதிரியான வேலையை எதிர்பார்க்கிறீர்கள் என்று யோசித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலைக்கும், விரும்பும் வேலைக்கும் அடிப்படை தொடர்பு இருக்கவேண்டும்.

2) தெளிவாக உங்களைப் பற்றிய குறிப்புகளை (Resume) தயார் செய்துக்கொள்ளுங்கள். கூடவே, கவர் லெட்டரும்.

3) ஒன்றிரண்டு முன்னணி வேலைவாய்ப்பு இணையத்தளங்களில் பதிவு செய்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, Naukri, Monster.

4) நிறுவனங்கள் இத்தளங்களில் தேடும் போது, குறிச்சொற்கள், அனுபவ வருடங்கள் வைத்தே தேடுவார்கள். குறிச்சொற்கள் (Keywords) உங்களுக்கேற்ப சரியாக அமைத்துக் கொள்வது முக்கியம்.

5) ஒவ்வொரு முறை நீங்கள் இத்தளங்களில் நுழையும்போதும், நீங்கள் ரிசண்ட் ஆக்டிவ் உறுப்பினர் ஆகிறீர்கள். நிறுவனங்கள் தேடும்போது, முதன்மை பெறுகிறீர்கள். அதனால், அவ்வபோது இத்தளங்களை பார்ப்பது மட்டும் போதாது. அடிக்கடி செல்லுங்கள்.

6) நன்றாக படித்துவிட்டு தான் விண்ணப்பிப்பேன் என்று நினைத்தால், நேர விரயம் தான் ஆகும். வேலைத்தேட ஆரம்பித்துவிட்டீர்கள் என்றால், உடனே விண்ணப்பிக்கவும். அழைப்புகள் வந்து, தேர்வுக்கு செல்லும்போது தான் படிக்கவும் தோன்றும். அச்சமயம் படிப்பது தான், மூளையிலும் ஆழப்பதியும்.

7) அதே சமயம், நிறுவனத்தில் இருந்து என்ன சொல்லி அழைத்தாலும், சிறிது கூட தயார் செய்து கொள்ளாமல் போகக்கூடாது. உதாரணத்திற்கு, HR இண்டர்வியூ என்று சொல்லி விட்டு, டெக்னிக்கல் இண்டர்வியூ வைத்துவிட வாய்ப்பு இருக்கிறது. எதற்கும் தயாராக இருக்கவும்.

8) படிக்கும் போது, சிறுக்குறிப்புகளாக எழுதி வைத்துக்கொள்ளவும். தேர்வுக்கு முன்பு கிளம்பும் போது, மேலோட்டமாக பார்த்துவிட்டு செல்ல உதவும்.

9) நேரத்திற்கு செல்லவும். கிளம்பும் முன்பு, தேவையானவை எல்லாம் இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ளவும். Resume இரண்டு-மூன்று நகல்கள் எடுத்துகொள்ளவும். ஒன்றிரண்டுக்கு மேற்பட்ட தேர்வாளர்கள் இருக்கும்போது, கொடுக்க உதவும்.

10) ஒவ்வொரு தேர்வின் போதும், இந்த வேலை கண்டிப்பாக கிடைத்துவிட வேண்டும் என்ற நினைப்பு நல்லதுதான். ஆனால், அதுவே ரொம்ப உறுதியாக இருந்துவிட்டால், பின்பு தேர்வு முடிவு சரிவராபட்சத்தில் சோர்வடைய செய்யும். அடுத்தடுத்த தேர்வுகளைப் பாதிக்கும். அதனால், ஒவ்வொரு தேர்வையும் ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ளவும்.

11) அனுபவங்களை பதிவு செய்து வைக்கவும். இதற்கென, ஒரு குறிப்பேடு வைத்துக்கொள்ளவும். ஒவ்வொரு தேர்வு முடிந்தவுடனும், என்ன கேள்விகள் கேட்கப்பட்டன என்று குறித்து வைத்துக் கொள்ளவும். உடனே குறித்து வைத்துக்கொண்டால், நிறைய கேள்விகள் ஞாபகத்தில் இருக்கும். தேதிவாரியாக, நிறுவனம்வாரியாக குறித்துக்கொள்ளவும்.

12) தேர்வின் போது, தெரியாமல் பதிலளிக்க முடியாமல் போன கேள்விக்கான பதிலை, பிறகு படித்து தெரிந்துக்கொள்ளவும். அடுத்து வேறு ஏதெனும் தேர்வில், அதே கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் போனால், நீங்கள் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம். அப்படி நிகழாமல் பார்த்துக்கொள்ளவும்.

13) சிரித்த முகத்துடன், தேர்வாளர்கள் உடன் அறிமுகப்படுத்திக்கொள்ளவும். இறுதிவரை சகஜமாக இருக்கவும்.

14) கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் பெரும்பாலும் நமது அனுபவக்குறிப்புகளில் இருந்தும், நாம் என்ன சொல்கிறோம் என்பதிலிருந்தும் தான் கேட்கப்படும். அதனால், resumeஇல் இருக்கும் சொற்கள் அனைத்திற்கும் உங்களிடம் பதில் இருக்க வேண்டும். அதேபோல், என்ன சொல்கிறோம் என்பதை யோசித்து சொல்லவும். அடுத்த கேள்வி, நீங்கள் சொல்வதில் இருந்தே எழும்பலாம்.

15) கேள்விகள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். சுத்தமாக தெரியாத கேள்விக்கு, தப்பான பதில் சொல்லி மாட்டிக்கொள்ள வேண்டும். தெரியாதவற்றை தெரியாது என்றே காரணத்துடன் சொல்லிவிடலாம். (12 பாயிண்ட் பார்க்கவும்.)

16) நேர்முக தேர்வு முடிவில், உங்களுக்கு அந்த நிறுவனம் பற்றி, நீங்கள் விண்ணப்பித்திருக்கும் வேலை பற்றி, ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.

இக்குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருந்து, ஏதேனும் குறிப்பில் மேலும் தகவல்கள் தேவையெனில் சொல்லுங்கள். மேலும் தகவல்கள் அளிக்க முயலுகிறேன்.

நீங்கள் விரும்பும் வேலையை விரைவில் அடைய வாழ்த்துக்கள்!!!

1 comment:

  1. Are you trying to make money from your websites/blogs via popunder ads?
    In case you are, have you ever used PopAds?

    ReplyDelete